அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.பி. இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை.இது 100 சதவீத குதிரை பேரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







