அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்காக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார். ஆனால் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் கைப்பட எழுதி கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுத்தி இசக்கி சுப்பையா அதனை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அளித்தார். இவரும் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ ஆவார்.







