அதிமுக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக…

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலை கண்டித்து கட்சி அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் திடீரென கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள சுரேஷ் என்பவரை மாற்றக்கோரி முழக்கம் எழுப்பிய தொண்டர்கள், துண்டு பிரசுரங்கள், பேனர்கள் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.