அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற…

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களோடு, கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அலுவலக வாயிலில் ஒற்றைத் தலைமை கோரி சிலர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஞ

அவ்வாறு முழக்கமிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என தெரியவந்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை கோரி முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் வந்து இருதரப்பு ஆதரவாளர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.