முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்தபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னிலையில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும்  பொள்ளாச்சி ஜெயராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதே போன்று, இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ், இ.பி.எஸுக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 3 மணியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நேற்றும் இன்றும் சுமார் 150 வேட்பு மனுக்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனில், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிடும்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், வேட்புமனுவை பரிசீலனை செய்த பின்னர் தான் அனைத்து விவரங்களும் சொல்ல முடியும், இதுவரை என்னிடம் எந்தவிதமான புகார் மனுக்களும் வரவில்லை, அனைத்து விவரங்களும் நாளை தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

நடிகராக மாறிய இயக்குனர்கள் சினிமாவில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்களா ?

Ezhilarasan

கேப்டன் வருண் சிங், மாணவர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் வைரல்

Ezhilarasan

அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!

Jeba Arul Robinson