முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமி 

சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து  திமுக ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபவுள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தில்லுமுல்லு செய்தே ஆட்சியைப் பிடித்தது  திமுக. அதேபோல்  உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற  திமுக தில்லுமுல்லு செய்யும். அதனை அதிமுகவினர் முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
திமுக அரசு பொறுப்பேற்ற 4 மாத காலத்தில் இருந்து தற்போது வரை அதிமுக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு மற்றும் அவதூறு பரப்பி வேலையை மட்டும் செய்து வருகிறது. மக்கள் நலனை யோசிக்க வில்லை என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றியதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
Advertisement:
SHARE

Related posts

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

Gayathri Venkatesan

முஸ்லீம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்பவர் இந்து அல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர்

Ezhilarasan

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

Halley karthi