முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விவசாயப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2021-2022 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அமைச்சர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பணியாற்றுகிறார்கள், அவர்கள் கேட்கும் நேரத்தை கொடுக்க முடியாமல் உள்ளது. செந்தில் பாலாஜி வேகமாக முந்திக்கொண்டு நேரம் பெற்றுள்ளார். செந்தில் பாலாஜியை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன் என்று கூறினார்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகளே வழங்கப்பட்டன எனவும், திமுக ஆட்சி தொடங்கிய 4 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை பொறுப்பேற்றிருக்கிறேன் எனவும் தெரிவித்த முதலமைச்சர், திருவாரூரில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா அமையவுள்ளது. 17 ஆயிரத்து 980 மெகாவாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம் என்றும் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல்: கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி

Halley karthi

நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

Halley karthi