அதிமுக கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் எடப்பாடி தாக்கல் செய்த மனுவுக்கு ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு கூடி அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக பொதுக்குழு வழக்கின் விசாரணையை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி இபிஎஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இநிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடைகால மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கிய உள்ள நிலையில், இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்தது கிடையாது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.