இபிஎஸ் பெயரில் 76 விருப்ப மனுக்கள்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பெற்றனர்!

மக்களவைத்  தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பெறப்பட்டன. மக்களவைகத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து…

மக்களவைத்  தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பெறப்பட்டன.

மக்களவைகத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,  மக்களவைத் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்பம் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.  அதன்படி,  கடந்த 21 ஆம் தேதி முதல் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த நிலையில்,  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற  தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பொதுச்செயலாளர் பெயரில் 76 விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றனர்.  தொடர்ந்து”#AMMA 76″ “புரட்சி தமிழரின் தலைமையில் தேசிய தலைமையை தீர்மானிப்போம்” என்ற விளம்பர பதாகை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் கூறியதாவது:

“யார் என்ன சொன்னாலும்,  அதிமுக ஒன்றுதான் வெற்றி பெற முடியும் என்பது தான் கள எதார்த்தம்.  மாநில உரிமைகள் எதை பற்றியும் தேசிய கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை,  இங்கு ஆட்சி செய்யும் திமுக அவர்கள் குடும்பத்தின் பற்றி மட்டும் தான் யோசிக்கிறார்கள்.  மேலும், 40க்கு 40 தொகுதியும் வெற்றி பெற்று தேசிய தலைமையை தீர்மானிக்கும் இடத்தில் இருப்போம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.