நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், நாளை ‘நமது அம்மா நாளிதழில்’ வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது, இந்நிலையில் சற்றுமுன் அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் பட்டியல் அறிவித்துள்ளது.
https://twitter.com/news7tamil/status/1487823978584367110
கடலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் என 298 பேர் கொண்ட பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதேபோல, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தருமபுரி நகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் சற்றுமுன் வெளியிட்டனர்.
https://twitter.com/news7tamil/status/1487823985584734210
அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில், 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
பாஜகவுக்கு இறுதியாக 8% மட்டுமே இடப்பங்கீடு வழக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா? என்பது சந்தேகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமைக் கழக ஒருங்கினைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவித்தனர்.
https://twitter.com/news7tamil/status/1487820139596705795
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







