பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும்; ஓ.பி.எஸ் கோரிக்கை

அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள…

அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஆகியோர் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு உள்ளனர். இதனை எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் அனுப்பி உள்ளோம்” என்று தெரிவித்தார்.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகத் தெரிவித்த வைத்திலிங்கம், “.இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது. பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஜெயலலிதா இருந்த போதும், அந்த அரங்கில் பொதுக்குழு நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது இடமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.மேலும், “பொதுக் குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து உள்ளோம். 30 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது. நேற்றே இந்த கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துவிட்டோம். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் வந்து சந்தித்து சென்றனர். ஆனால் சமாதானம் செய்ய அவர்கள் வரவில்லை” என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.