முக்கியச் செய்திகள் இந்தியா

24 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்றும் இன்றும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து செய்தியளர்களிடம் பேசிய ஐஜி விஜய் குமார், குப்வாராவில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நேற்றே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஒரு பாகிஸ்தானிய தீவிரவாதி இன்று காலை  சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷொகத் என்ற தீவிரவாதியும் இவர்களோடு சேர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

புல்வாமாவில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஐஜி விஜய் குமார், குல்காமில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியும், ஒரு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதன்மூலம், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குப்வாரா மற்றும் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்த விஜய் குமார், குல்காமில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளில் 4 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஷங்கர் -ராம் சரண் படத்தை ரூ.350 கோடிக்கு வாங்கியது ஜீ ஸ்டூடியோஸ்?

Halley Karthik

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? சென்னை உயர்நீதிமன்றம்

Saravana Kumar

”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”- மு.க.ஸ்டாலின்!

Jayapriya