ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அவைத் தலைவர் என தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் கோபமடைந்து பொதுக்குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்கிற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லிக்கு நேற்றிரவு திடீரென புறப்பட்டு சென்றார் ஓபிஎஸ்.அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளது. அதில், “ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. ஆகவே, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கக்கூடாது” என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.