அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. முதல்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 5ம் தேதி வரை தகுதியுடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல் பேட்ச் வீரர்கள் டிசம்பரில் இந்திய விமானப் படையில் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 30ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என்று விமானப் படை ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்திய விமானப் படையில் வீரர்கள் சேர்க்கப்பட்டுவிட்டால், 4 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். அக்னி வீரர்கள் இந்திய விமானப் படைச் சட்டம் 1950இன் கீழ் நிர்வகிக்கப்படுவார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்னிவீரர்கள் ஒரு தனித்துவமான தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். இது தற்போதுள்ள எந்த தரவரிசையிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும். 18 வயதிற்குட்பட்ட அக்னி வீரர்களுக்கு, தற்போதுள்ள விதிகளின்படி, பதிவுப் படிவத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும். தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே 2-ஆம் கட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
10 அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடத்தை படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள https://careerindianairforce.cdac.in/assets/joining_instructions/AGNIVEER_VAYU.pdf என்ற வலைத்தளத்தை பாருங்கள்.
-மணிகண்டன்