முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, மாணவன் கைது

அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் 16 வயது மாணவன், 14 மற்றும் 17 வயது மாணவிகள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 8 பேர் ஒருவர் ஆசிரியர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீசார் பிடித்தபோது அந்த மாணவன் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர். அந்த மாணவன் 15 முதல் 20 ரவுண்ட் சுட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் எதையும் பேச மறுப்பதாகவும் தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Halley Karthik

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

Saravana Kumar

சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!

Ezhilarasan