அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதுபற்றிய திட்டமிடல்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது







