அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் அஷ்வின். சினிமாவில் நடிக்கவே இவர் சென்னைக்கு வந்ததாக இந்த நிகழ்ச்சியிலே சொல்லியிருப்பார். அதுபோலவே ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். குக்வித் கோமாளியில் காமடியில் கலக்கிய புகழும் இதில் நடிக்கிறார். விவேக்,மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். காதல், காமெடி கலந்து உருவாக உள்ள இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.
இப்படத்தின் படபிடிப்பு வருகிற ஜூலை 19ம் தேதி தொடங்க உள்ளது. தேஜூ அஸ்வினி பல யூடியூப் சேனலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது







