அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 71 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்திற்கு முன்னதாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இந்த கூட்டத்தில் கர்நாடக தேர்தல், உறுப்பினர்கள் சேர்க்கை, டிடிவி ஓபிஎஸ் -தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது உள்ளிட்ட அரசியல் சூழல்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.







