சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 10ம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கியது.
பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், டிக்கெட் விற்பனையின்போது சந்தேகப்படும்படியான 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 23, 24 ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக Paytm ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.







