திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் திமுகவில் இணைத்துள்ளனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 இடங்களில், திமுக 11, அதிமுக…

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 இடங்களில், திமுக 11, அதிமுக 11, சுயேட்சை வேட்பாளர்கள் 5 என வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் திமுகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து திமுகவின் பலம் 16 ஆக உயர்ந்தது. இருப்பினும் மணப்பாறை நகரமன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது 1வது வார்டு அதிமுக உறுப்பினர் செல்லம்மாள் மற்றும் 13-வது வார்டு உறுப்பினர் வாணி ஆகியோர்  திமுகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மணப்பாறை நகரமன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் இருக்கும் நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது. நகர்மன்றத்தை 53 வருடங்களுக்கு பிறகு கைப்பற்றியுள்ள அதிமுக அதைத் தக்கவைத்துக் கொள்ளும்மா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.