ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பதை கர்நாடக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை தடுத்த நிறுத்த, கர்நாடக அரசுக்கு தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/OfficeOfOPS/status/1485171557802536964
மேலும், திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மேலும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாகவும், இதற்கு அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம், தெரிவித்துள்ளார்.








