எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டப்பணிகளை எதிர்க்க கர்நாடகத்திற்கு உரிமையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டப்பணிகளை எதிர்க்க கர்நாடகத்திற்கு உரிமையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை கர்நாடகா அரசு எதிர்ப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பது, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் கூறியிருப்பது அபத்தமானது எனவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

ஒகேனக்கல் வரும் காவிரி நீரில், புதுச்சேரிக்கான 7 டிஎம்சி தவிர, மீதமுள்ள நீர் முழுவதும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்றும், அதை வைத்து இரண்டாம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் போது, அதில் தலையிட கர்நாடக அரசிற்கு எந்த உரிமையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.