சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி: தவாக தலைவர் வேல்முருகன்

அடிப்படை கொள்கைகளில் சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சென்னை தேனாம்பேட்டை…

அடிப்படை கொள்கைகளில் சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் போட்டியிட்ட தங்கள் வேட்பாளர்களில் 95 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். திமுக கூட்டணி மகத்தான மாபெரும் வெற்றியை பெற்றிருப்பதாகவும் வேல்முருகன் பெருமிதம் தெரிவித்தார். சிறப்பான அரசு என்பதற்கான சான்றாக வெற்றியை மக்கள் பரிசாகக் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக வேட்பாளர்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை நேரில் சந்தித்து, வாழ்த்துகளை பெற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, பாஜகவிற்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிப்பதாக கூறினார். ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை என்றும் மெய்யநாதன் குறிப்பிட்டார். .நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 20 சதவீத வாக்குகள் உயர்ந்து 61 சதவீதம் வாக்குகளை திமுக பெற்றுள்ளதாக கூறினார். ஏழை எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தம்மை ஒப்படைத்த முதலமைச்சருக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.