தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கனா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மாராண்டியும், பஞ்சாப் மாநிலத் தலைவராக சுனில் ஜாகர் மற்றும் ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்யபட்டுள்ளனர். நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








