இந்தியா – இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனித்தும், பின்னர் குழுவாகவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து, பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுச்சூழல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தம் பரிமாரிக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நரேந்திர மோடியும், போரிஸ் ஜான்சனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வேளையில், போரிஸ் ஜான்சன் வருகை தந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார். போரிஸ் ஜான்சனுடனான தமது பேச்சுவார்த்தையின் போது, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறய பிரதமர் மோடி, உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர், முடிவுக்கு வர இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியாவும், இங்கிலாந்தும் வலியுறுத்துவதாக கூறினார்.
இந்தோ பசுபிக் கடல் பகுதி, கட்டுப்பாடுகள் அற்றதாக, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதை இங்கிலாந்தும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், வான், கடல், தரை என அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் இணைந்து எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதற்கான இலக்கை இந்தியா அடைய பிரிட்டன் ஆதரவளிக்கும். எனவும், இருநாடுகள் இடையே உறவு மேலும் வலுப்பெற இந்த பயணம் வழி வகுத்துள்ளதாகவும் போரிஸ் ஜான்சன், தெரிவித்தார்.