மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்களை பார்க்கும் போது மனமகிழ்ச்சி அடைவதால், தனக்கு 10-வயது குறைந்தது போன்ற உணர்வு தோன்றியுள்ளதாக கூறினார்.
ஆசிரியர்கள், இன்னொரு பெற்றோராக மாணவர்களை அரவணைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். நாட்டிலேயே தமிழ்நாடு மாநிலம் தான் முதலிடம் வகிக்கிறது என்று கூறும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, தானும், அமைச்சர்களும் அயராது உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
எந்த பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.







