மீண்டும் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு, அரங்குகள் அமைக்கும் பணிகள்
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில் லைகா நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் அடுத்த மாதம் முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.