“திமுகவுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் திமுக குணம் வந்துவிடும்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தூத்துக்குடி நிர்பயா வழக்கு பற்றி அருவருக்கத்தக்க கருத்தை தெரிவித்து உள்ளது கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திமுக ஆதரவாளரும், திமுக தலைவர் ஸ்டாலினின் நடைபயிற்சி நண்பருமான நடிகர் SV சேகர், திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி நிர்பயா வழக்கு பற்றி எவரும் சொல்லவே கூசும் வகையில் அருவருக்கத்தக்க கருத்தை தெரிவித்து உள்ளது கண்டனத்திற்குரியது.

திமுகவுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் திமுக குணம் வந்துவிடும் போல.
இது எஸ்வி சேகரின் கருத்து மட்டுமல்ல ; ஸ்டாலின் நடத்திய ஐந்தாண்டு ஆட்சியைப் பார்த்தால் அவருக்கும் இதே எண்ணம் தான் இருக்கும் என்றே எண்ண தோன்றுகிறது!

தமிழக பெண்களை பற்றி,
அவர்களின் பாதுகாப்பு பற்றி
இவ்வளவு இழிவான எண்ணம் கொண்ட
இவர்களின் ஆட்சி மீண்டும் வரவேண்டுமா?

தமிழகம் வாழவேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.