முக்கியச் செய்திகள் சினிமா

முடிவுக்கு வந்தது ‘இந்தியன் 2’ பஞ்சாயத்து: மீண்டும் தொடங்குகிறது ஷூட்டிங்!

இயக்குநர் ஷங்கர்- லைகா நிறுவனத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ’இந்தியன் 2’ படப்பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உட்பட பலர் நடித்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனாலும் கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் படத்தின் பட்ஜெட் தொடர்பாக, ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படம் எப்போது தொடங்கும் என்று தெரியாததால், இயக்குநர் ஷங்கர், தெலுங்கு ஹீரோ ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாயின.

இதையடுத்து ’இந்தியன் 2’ திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப்படங்களை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஐதராபாத்திலும் ஷங்கருக்கு எதிராக லைகா  வழக்குத் தொடர்ந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நீதிமன்றம் நியமித் தது. இதிலும் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குநர் ஷங்கரை சமீபத்தில் சந்தித்த தாகவும் அப்போது ’இந்தியன் 2’ பிரச்னை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வும் கூறப்படுகிறது. அந்த ப்படத்தை இயக்க எப்போதும் தயாராக இருப்பதாக ஷங்கர் தெரிவித்தாராம்.

இதனால் ஷங்கர் மீது லைகா தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுவிடுவதாக சுபாஷ்கரன் உறுதி அளித்ததாகவும் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதையடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தை முடித்த பின், ’இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

Jeba Arul Robinson

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Halley karthi

மௌனசாமியான ரங்கசாமி ஜெயிப்பாரா?