கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் பாஜக சிறப்பு வாக்காளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரிக்கு தேர்தல் பரப்புரைக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (பிப்.7) தமிழ்நாடு வரவுள்ளதாக தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாகவும் கிஷன் ரெட்டி விளக்கம் அளித்தார்.







