தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய காம்போக்களில் உச்சம் தொட்டவர்கள் என்றால் அனிருத்- தனுஷை சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் உருவான ஒவ்வொரு படத்தின் ஆல்பமும் இந்திய சினிமாவிலேயே புதியதொரு ட்ரெண்டை உருவாக்கியது. 3, வேலையில்லா பட்டதாரி, மாரி என தனுஷ் நடித்த படங்களாகட்டும் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தனுஷ் தயாரித்த படங்களாகட்டும் எல்லாமே இளைஞர்களின் நாடி நரம்புகளை எல்லாம் பதம் பார்த்த சூப்பர் ஹிட் ஆல்பங்கள். dhanush and anirudh கூட்டணியை DNA என பெயர் வைத்து கொண்டாடித்தீர்த்தனர் இணையவாசிகள்.
இந்நிலையில் தனுஷின் தங்க மகனுக்கு பிறகு இந்த கூட்டணி உடைந்தது. தன்னை அறிமுகப்படுத்திய தனுஷை விட சிவகார்த்திகேயன் படங்களில் தான் தனுஷ் அதிக கவனம் செலுத்தினார் போன்ற நிறைய காரணங்களால் தான் இருதரப்பிலும் மனக்கசப்பு உருவாகி பிரிந்துவிட்டார்கள் என நிறைய கதைகள் சொல்லப்பட்டாலும் இருவரும் பொதுவெளியில் பரஸ்பரம் மரியாதையுடனே பேசிக்கொண்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து வந்த தனுஷின் VIP -2 உள்ளிட்ட நிறைய படங்களில் அனிருத் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது. அனிருத் பாடல்களுமே தனுஷின் வரிகளையும் நடனங்களையும் மிஸ் செய்ததை உணரமுடிந்தது. இந்நிலையில் 7 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு இரண்டு கலைஞர்களுமே ஒன்றிணையும் படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதனுடைய Announcement வீடியோவை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
https://twitter.com/dhanushkraja/status/1539594192971698176
நடன இயக்குநர் சதிஷ் பாடலில் பெயர் குறித்து கேட்க நாட்டாமை படத்தில் புகழ்பெற்ற வார்த்தையான ‘தாய் கிழவி’ தான் பாடலின் பெயர் என அப்படத்தில் நடித்திருந்த பொன்னம்பலமே cameo செய்து கூறுவது போல் அமைந்திருந்தது அந்த வீடியோ. அதில் வரும் பாடலின் 3 நொடி பீட்-களை கேட்கும் போதே நிச்சயம் இந்த ஆண்டின் சென்சேஷனாக இப்பாடல் மாறப்போகிறது என்பதை உணரமுடிகிறது என்கின்றனர் இசை ஆர்வலர்கள். நீங்கள் அடித்து நொறுக்குங்கள் DNA!







