11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.
இதையும் படியுங்கள் : லோகேஷ்-க்கு “ஹெலிகாப்டர் உறுதி” – வைரலாகும் ரத்னகுமாரின் X தள பதிவு
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சென்னைக்கு வந்தடைந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில் போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.







