கட்டுரைகள்

கோடநாடு விவகாரம்- களமிறங்கும் புதிய தனிப்படை


கார்த்தி. ரா

கட்டுரையாளர்

2017 ஏப்ரலில் நடைபெற்ற கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை விசாரிக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புது தனிப்படை இன்று (செப்.2) அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கின் மீதான நீதிமன்ற விசாரணைக்கு ஜெயலலிதாவின் ஓட்டுநராக இருந்த நடராஜனை தவிர, சயான் உட்பட 10 பேர் ஆஜராகியிருந்தனர். சயானுடன் கனகராஜ் என்பவர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அவர் கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் போக்கு தீவிரமடைய தொடங்கியது.

பரபரப்பின் உச்சமாக டெல்லியில் தெஹல்கா பத்திரிகையின் புலனாய்வு ஆசிரியர் மேத்யூ, “அதிமுகவினரின் ஊழல் குறித்த ஒப்புதல் வாக்குமூல ஆவணத்தின் கோப்புகளை ஜெயலலிதா கோடநாடு இல்லத்தில் வைத்திருந்தார். அதனை எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற நினைத்தார்.” என கூறி வழக்கின் துடிப்பை மேலும் அதிகரித்தார்.

இது இவ்வாறு இருக்க மறுபுறம் கோடநாடு வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணை வேண்டும் என்றும் இதில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் தேர்தல் வாக்குறுதியில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

மறுபுறத்தில் கோடநாடு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரியின் முன்னாள் மாவட்ட ஆட்சியர், கொள்ளை நடந்த எஸ்டேட் மேலாளர் நடராஜன் என பலரை விசாரிக்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க ஒப்புதல் அளித்தது.

நீலகிரி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை,சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபு தரப்பு தாக்கல் செய்து தனது பிடிக்கு வலுசேர்க்கத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரத்தில், இந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க. விதி எண் 55ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இது புகைந்துக்கொண்டிருந்த கோடநாடு விவகாரத்திற்கு வினையூக்கியாக அமைந்தது. செல்வப்பெருந்தகையின் பேட்டியையடுத்து நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு குறித்து பேரவையில் விவாதிப்பது பேரவை விதி 92க்கு எதிரானது என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை அதிமுக தொண்டர்கள் வரவேற்கின்றனர் என்று திமுக தரப்பில் கூறி வருகின்றனர். ஆனால், “2006ல் இதே போல அப்போது ஒரு வழக்கு குறித்து அதிமுக விவாதம் எழுப்ப முணையும்போது அப்போதைய சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் பேசுவது விதிமீறல் என கூறினார்”, என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளருமான இன்பதுரை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2017ல் தொடங்கிய இந்த பிரச்னை, 4 ஆண்டுகளை கடந்த நிலையில், “எல்லாவற்றிற்கும் ஓர் உச்சமுண்டு” என்கிற இயற்பியல் விதியின் அடிப்படையில் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“வலிமை” அப்டேட் வெளிவராத ரகசியம் என்ன?

Vandhana

எச்சரித்த நரசிம்மராவ்; சாதித்த மன்மோகன் சிங்

Ezhilarasan

தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

Dhamotharan