ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு; 16 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன.…

ஆப்கானிஸ்தானில் நடத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் புதிய  கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெண்களின் கல்வியை தொடர பள்ளிகளை திறக்ககோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “கல்வி என் உரிமை! பள்ளிகளை மீண்டும் திற!” போன்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

ஆட்சி அதிகாரத்தில் தலிபான்கள் வந்த பிறகு, 1996 முதல் 2001 வரை அதிகாரத்தில் இருந்த போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருக்காது என உறுதியளித்தனர். ஆனால் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை விடுத்த கோரிக்கையும் தலிபான்கள் நிராகரித்தனர்.

இந்நிலையில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிய குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.