அசாமில் வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு அண்மையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரமாகி உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பாஜக முடிவு செய்யாமல் இருந்தது. இதனை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து சர்பானந்தா சோனவல் ராஜினாமா செய்தார்.
அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இதையடுத்து, கவுஹாத்தியில் பா.ஜ.க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபை குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.







