அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நலம்பெற விழைகிறேன் – ஸ்டாலின் ட்வீட்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த…

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருப்பினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நேற்று  மேற்கொள்ளப்பட்டது. மாலையில் முடிவு வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.