தேர்தலில் பெண்களின் ஓட்டு அதிகமாக பதிவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அம்பேத்கர் உலக தலைவர் என்றும் அவரை ஜாதிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமரின் நிவாரண நிதி குறித்து ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை வழங்க வேண்டுமே தவிர கேள்விகள் மட்டுமே எழுப்பக் கூடாது என சாடினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகள் அதிகளவில் பதிவாகி இருப்பதால் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.







