ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட தலைவி, இந்தியில் எடுக்கப்பட்ட ஜெயா திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட தலைவி, இந்தியில் எடுக்கப்பட்ட ஜெயா திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில் தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம், இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் வெளியிடப்படுகிறது. இந்த படங்களிலும், குயின் இணையதள தொடரிலும், தங்களது குடும்பம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சக்தி சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதாவை நல்லமுறையிலேயே சித்தரித்து படம் எடுத்துள்ளதாக படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவி மற்றும் ஜெயா திரைப்படங்களை வெளியிடத் தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.