டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் நிர்வாக சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே நியமிக்க வழிவகுக்கும், டெல்லி உயரதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்ட மசோதா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி நிர்வாக மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இச்சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவைக்கு பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், டெல்லி நிர்வாக மசோதாவை நிறைவேற்ற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.







