விண்ணில் ஏவப்படும் ஆதித்யா L1 விண்கலத்திற்கான 24 மணி நேரத்திற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், அதற்கான தகவல்களை சிறப்பு நேரலையில் இங்கு காணலாம்…
புவிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருந்து எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேல்பரப்பில் இருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன.
அது போன்ற சூரியப் புயல்கள் பூமியை தாக்கினால் அதனுடைய தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை ஆரம்பகட்டத்திலேயே அடையாளம் காண ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்கலத்தை ஏவ உள்ளது.







