புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 333ம் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் புகழ்பெற்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் 333ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலையில் கோலாகலமாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு காலையில் புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆலய பெருவிழா கொடிக்கு சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது.இதில் பங்குதந்தை அந்தோணி ரோச் தலைமை தாங்கினார்.தொடர்ந்து கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் ஆலய பங்கு நிர்வாக பொறுப்பாளர்கள் லூர்துசாமி,மில்கி,ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பெருவிழா நாட்களில் காலை,மாலை இருவேளையும் கூட்டு திருப்பலி நடைபெறும்.விழாவின் சிகர நிகழ்வான ஆடம்பர தேர்பவனி வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது.
வேந்தன்