‘ஆதித்யா- எல்1’ விண்கலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தயார் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.!

‘ஆதித்யா- எல்1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3க்கு வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது…

‘ஆதித்யா- எல்1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3க்கு வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 சாட்டிலைட் சூரியனை வரும் செப். 2-ல் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செப். 2 காலை 11.50க்கு ஆதித்யா விண்ணில் பாய உள்ளது.


ஆதித்யா-எல்1 சாட்டிலைட் என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் லட்சிய முயற்சியாகும். சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். எனவே, இந்த சூரியனில் இருந்து கிளம்பும் காந்தப்புலன்கள் குறித்து நாம் ஆய்வு செய்வது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1  ஒத்திகை நிறைவைடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

” ஆதித்யா-எல்1 மிஷன் அனுப்ப தயாராகி வருகிறோம். ராக்கெட் மற்றும் செயற்கைக்
கோள் தயாராக உள்ளன. இதற்கான ஒத்திகையை முடித்து விட்டோம். விண்கலம்
அனுப்புவதற்கான கவுண்டவுன் இன்று  முதல் தொடங்குகிறது. நாளை
(செப்.2ந் தேதி) சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலம் அனுப்பப்படும்.

சந்திரயான் 3 வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து தரவுகளும் நன்றாக
வருகின்றன. 14 நாட்கள் முடிவில் எங்கள் பணி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறோம் என சோம்நாத் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.