சீமான் மீதான புகார் : நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறை!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை போலீசார் விசாரணை நடத்தினர். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார் அதில் தன்னை சீமான் காதலித்த நிலையில் இருவரும் 2008 ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும், இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில் நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது. அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போலீஸ் நிலையிலிருந்து செல்வேன் என விஜயலட்சுமி காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.