விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவைடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் 3க்கு வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 சாட்டிலைட் சூரியனை வரும் செப். 2-ல் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செப். 2 காலை 11.50க்கு ஆதித்யா விண்ணில் பாய உள்ளது.
ஆதித்யா-எல்1 சாட்டிலைட் என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் லட்சிய முயற்சியாகும். சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் காந்தப்புலன்கள் பூமியில் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் மின் கட்டுமானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். எனவே, இந்த சூரியனில் இருந்து கிளம்பும் காந்தப்புலன்கள் குறித்து நாம் ஆய்வு செய்வது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவைடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.







