நடிகை பூஜா ஹெக்டே ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கால் வலியால் அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த அவர், விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ’, ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது, தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர்காரம் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அதில் இருந்து விலகினார். அடுத்து பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலும் நடிக்க இருந்தார். அதில் இருந்தும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தபோது கால் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால், வலி தொடர்வதால் அவர் மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் அவர் படங்களில் இருந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி பூஜா ஹெக்டே ஏதும் அறிவிக்கவில்லை.







