அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் இன்று நல்லடக்கம்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடன் இன்று மதியம் நல்லதாம் செய்யப்பட உள்ளது.

இசையமைப்பாளர் தேவா உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனிடையே தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சிவகார்த்திகேயன உள்ளிட்ட தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதிப்பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் உள்ள அவரது தோட்டத்தில் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.