அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமடைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஆறு வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும்…

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஆறு வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அக்கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், அதிமுக மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய குழுவினர், வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக நேரடியாக களமிறங்கும் தொகுதிகளுக்கான இரண்டாது கட்ட பட்டியல், விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.