முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்-சேலம் அணி தொடர்ந்து 6வது தோல்வி

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

இது சேலம் அணிக்கு 6வது தோல்வியாகும். சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு இரு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. திருச்சி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, முதலில் விளையாடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் கோபிநாத் மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். எஞ்சிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

திருச்சி அணி கேப்டன் ரஹில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடி திருச்சி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது.

அப்போது மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி அணிக்கு இது 2ஆவது வெற்றியாகும். சேலம் அணிக்கு தொடர்ந்து இது 6 ஆவது தோல்வியாகும். சேலத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

G SaravanaKumar

திமுக தான் அதிமுகவில் இணையும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Halley Karthik

போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் – எஸ்.பி. ஜெயச்சந்திரன் அறிவுரை

Web Editor