மும்பையில் மெட்ரோ தொழிலாளர்கள் மீது மோதிய நடிகையின் கார்: ஒருவர் பலி !

மராத்தி நடிகை ஊர்மிளா கோத்தாரேவின் கார் ஏற்படுத்திய விபத்தில் மெட்ரோ தொழிலாளர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மும்பை, கண்டவளி என்ற இடத்தில் போயிசர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே…

மராத்தி நடிகை ஊர்மிளா கோத்தாரேவின் கார் ஏற்படுத்திய விபத்தில் மெட்ரோ தொழிலாளர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மும்பை, கண்டவளி என்ற இடத்தில் போயிசர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு சில பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மராட்டிய நடிகை ஊர்மிளா கொத்தாரே அந்த வழியாக படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென காரின் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளார்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை ஊர்மிளா கொத்தாரே லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்தியது ஹூண்டாய் வெர்னா கார் என்றும், ஏர்பேக் நடிகையின் உயிரை காப்பாற்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.