முக்கியச் செய்திகள் குற்றம் சினிமா

சீரியல் நடிகை தற்கொலை: சக நடிகரிடம் விசாரணை

சீரியல் நடிகை தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவர் காதலரிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சவி மாதப்பா (25). இவர் செளஜன்யா என்ற பெயரில் சினிமா மற்றும் டிவி.சீரியல்களில் நடித்து வந்தார். ராமநகர் மாவட்டம் கும்பலகோடு பகுதியில் உள்ள தொட்டபெலே கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி, அவர் தனது வீட்டில் தூக் கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நலக்குறைவு காரணமாக, மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் செளஜன்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது காதலரான நடிகர் விவேக், உதவியாளர் மகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் செளஜன்யாவின் தந்தை பிரபு மாதப்பா புகார் அளித்தார். அதில் நடிகையில் வீட்டில் இருந்த நகைகள், பணம் மாயமாகி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதற்கிடையே செளஜன்யாவின் உடல் அவர் சொந்த ஊரில் தகனம் செய்யப் பட்டது.

இந்நிலையில் பிரபு அளித்த புகாரின் அடிப்படையில், நடிகையின் காதலரும் நடிகருமான விவேக், செளஜன்யாவின் உதவியாளர் மகேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பாஜகவுக்கு ஆதரவாக பேசினேனா? ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

Halley karthi

உள்ளாட்சித் தேர்தல்: பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை

Ezhilarasan

தினசரி உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 15 ஆயிரத்தை நெருங்கியது!

Ezhilarasan